இந்தியா மீதான வரியை 15 சதவீதம் குறைக்கிறோம்.. ஆனால்..? - அமெரிக்கா போடும் கண்டிஷன்!

Prasanth K
வியாழன், 23 அக்டோபர் 2025 (09:22 IST)

இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில் அதை குறைத்துக் கொள்ள சில நிபந்தனைகளை விதிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் உக்ரைன் போர் நீடிப்பதாக குற்றம் சாட்டிய அமெரிக்கா, இந்தியா மீது 50 சதவீத வரியை விதித்துள்ளது. இதனால் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் இந்திய ஏற்றுமதியாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

 

அதை தொடர்ந்து இந்தியா - அமெரிக்கா இடையே சுமூகமான வர்த்தக உறவை தொடர புதிய வர்த்தக ஒப்பந்தத்தை கொண்டு வர பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில், ரஷ்யாவுடனான எண்ணெய் வணிகத்தை நிறுத்திக் கொண்டால் இந்தியா மீதான வரியை 15 சதவீதமாக குறைத்துக் கொள்ள தயாராக இருப்பதாக அமெரிக்க தரப்பில் டீல் பேசப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதனால் அமெரிக்காவுடன் பல்வேறு வர்த்தகங்களுக்கான வாயில்களும் திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,

 

இந்த மாத இறுதியில் நடைபெற உள்ள ஆசியன் உச்சி மாநாட்டில் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடி கலந்துக் கொள்ள உள்ளனர். அப்போது அவர்களிடையே ஒரு சந்திப்பு நடைபெறும் என்றும், இதுகுறித்து விவாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments