Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிரம்ப், ஹாரிஸ் யார் ஜெயித்தாலும் இந்திய-அமெரிக்க உறவு மேம்படும்: அமைச்சர் ஜெய்சங்கர்..!

Advertiesment
டிரம்ப், ஹாரிஸ் யார் ஜெயித்தாலும் இந்திய-அமெரிக்க உறவு மேம்படும்: அமைச்சர் ஜெய்சங்கர்..!

Mahendran

, புதன், 6 நவம்பர் 2024 (11:58 IST)
அமெரிக்கா அதிபர் தேர்தல் வாக்கு எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கமலா ஹாரிஸ் மற்றும் ட்ரம்ப் ஆகிய இருவரும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் இருந்து வருவதால் முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவில் நிலையான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் இந்திய-அமெரிக்க உறவுகள் வளர்ச்சி அடையும் என்று தெரிவித்தார். 

அமெரிக்க தேர்தலை பார்க்கும்போது முடிவு என்ன என்பதை கணிக்க முடியவில்லை என்றும், ஆனால் அதே நேரத்தில் மக்களின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் எங்கள் உறவு தொடர்ந்து வளரும் என்பதில் இரு நாடுகளும் உறுதியாக உள்ளோம் என்றும் தெரிவித்தார்.

டிரம்ப் அதிபராக இருந்தபோது இந்திய-அமெரிக்க உறவுகள் புத்துயிர் பெற்றது என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் 47% வாக்குகளை மற்றும் 51% வாக்குகளை பெற்றுள்ளார். இருவருக்கும் இடையிலான வித்தியாசம் மிகவும் குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டொனால்ட் டிரம்ப் 247 எலக்டோரியல் வாக்குகளையும், கமலா ஹாரிஸ் 214 எலக்டோரியல் வாக்குகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் மட்டும் 70 பெட்ரோல் பங்க் மூடல்; அதிர்ச்சி காரணம்..!