உக்ரைன் நாட்டுக்கு எதிரான போரில் முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றிய நிலையில் அந்த நகரங்களை ரஷ்யாவுடன் இணைக்க சமீபத்தில் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. இந்த கருத்துக்கணிப்பில் 96% பேர் கைப்பற்றப்பட்ட நகரங்களை ரஷ்யாவுடன் இணைக்க ஆதரவு தெரிவித்ததை அடுத்து விரைவில் அந்த நகரங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்படும் என ரஷ்ய அதிபர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
இந்தநிலையில் ரஷ்யாவின் இந்த முடிவுக்கு ஐநா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது குறித்து ஐநா பொதுச்செயலாளர் விடுத்த எச்சரிக்கையில், ரஷ்யாவின் இந்த நடவடிக்கைகள் உக்ரைனின் அமைதிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இந்த ஆபத்தான தருணத்தில் ஐக்கிய நாட்டு சபையின் சாசனஙக்ளை நிலைநிறுத்த பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கடமையை நான் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்
ஒரு தேசத்தில் கைப்பற்றப்பட்ட நகரங்களை பலத்தினால் கைப்பற்றி அந்த நகரங்களை தங்களுடைய தேசத்துடன் இணைக்கும் நடவடிக்கை என்பது ஐநாவின் சாசனம் விதிகளுக்கு எதிரானது என்றும் இதனைச் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
ஆனால் இதுகுறித்து ரஷ்ய செய்தி தொடர்பாளர் கூறியபோது இன்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் புதிய நகரங்களை இணைத்தல் தொடர்பான கையெழுத்திடும் விழா நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்