Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூ.625 கோடி; முடிவுக்கு வந்த ட்வின் டவர் இழப்பீடு வழக்கு!!

Advertiesment
ரூ.625 கோடி; முடிவுக்கு வந்த ட்வின் டவர் இழப்பீடு வழக்கு!!
, வியாழன், 23 நவம்பர் 2017 (15:50 IST)
ட்வின் டவர்  இழப்பீடு வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.  அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டு நடந்த ட்வின் டவர் தாக்குதல் நடைபெற்றது. 
 
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டை கோபுர கட்டிடத்தின் மீது அல்-காய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 
 
இதில் தாக்குதலில் 2,750 பேர் உயிரிழந்தனர். அதோடு அந்த கட்டிடம் தரை மட்டமானது. ட்வின் டவர் கட்டிடம் நியூயார்க் மற்றும் நியூஜெர்ஸி துறைமுக கழகத்துக்கு சொந்தமானது. 
 
தாக்குதலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்புதான் ட்வின் டவரை சில்லவர்ஸ்டீன் என்பவர் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தார். 
 
அவர் கட்டிடத்துக்கு இன்சூரன்ஸ் செய்திருந்த நிலையில், இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.30,000 கோடியை இழப்பீடாக பெற்றார்.
 
ஆனாலும், தீவரவாதிகளால் பயன்படுத்தப்பட்ட அமெரிக்க ஏர்லைன்ஸ் மற்றும் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் மீதும் வழக்கு தொடர்ந்தார். 
 
விமான நிறுவனங்களிடம் இருந்து ரூ.81,100 கோடி இழப்பீடு கோரினார். இந்த வழக்கு கடந்த 2001 முதல் நடந்துவருகிறது. இந்த வழக்கிற்கு தற்போது முடிவு வந்துள்ளார்.
 
ரூ.81,000 கோடி கேட்கப்பட்டிருந்த நிலையில், ரூ.625 கோடி இழப்பீடு வழங்க விமான நிறுவனங்கள் ஒப்புக் கொண்டன. இதை சில்லவர்ஸ்டீனும் ஒப்புக் கொண்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலியல் பலாத்காரம் செய்த 4 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு...