Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சசிகுமார் உறவினர் தற்கொலை எதிரொலி: பிரபல பைனான்சியர் மீது வழக்குப்பதிவு

Advertiesment
sasikumar
, செவ்வாய், 21 நவம்பர் 2017 (22:13 IST)
நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் இன்று மாலை தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது வீட்டில் இருந்த கடிதம் மூலம் அவரது தற்கொலைக்கு பிரபல பைனான்சியர் அன்புச்செழியன் காரணம் என்று கூறப்படுகிறது.





இந்த நிலையில் சசிகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்கொலைக்கு தூண்டியதாக பைனான்சியர் அன்புச்செழியன் மீது வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  

இதுகுறித்து சசிகுமார் கூறியபோது, 'என்னுடைய அத்தை மகன் அசோக்குமார். என்னுடைய பட நிறுவனத்தை கவனித்து வந்தார். இணை தயாரிப்பாளராகவும் இருந்தார். இன்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு மேல் என்னால் எதுவும் சொல்ல முடியாது' என்று கண்ணீருடன் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகுமார் நண்பர் தற்கொலை! கடைசி கடிதத்தில் உள்ளது என்ன?