கமலா ஹாரிஸ் ஒரு இடதுசாரி பைத்தியம் என தேர்தல் பிரச்சாரத்தின் போது டொனால்ட் டிரம்ப் வசை பாடியது பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக இருந்த ஜோ பைடன் விலகியதை அடுத்து அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட உள்ளார். இதனால் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் மோத இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய டிரம்ப் கடந்த மூன்று ஆண்டுகளில் அமெரிக்காவை அழிவு பாதைக்கு கொண்டு சென்று இருக்கிறார் பைடன் என்றும் அவருக்கு பின்னணியில் கமலா ஹாரிஸ் இருந்து வருகிறார் என்றும் அவர் ஒரு இடதுசாரி பைத்தியம் என்றும் அவர் அதிபர் ஆனால் நாட்டை அழித்து விடுவார் என்றும் அதனை நாங்கள் நடக்க விடமாட்டோம் என்றும் தெரிவித்தார்.
கமலா ஹாரிஸ் பயங்கரமானவர் என்றும் அமெரிக்க வரலாற்றில் அதிபர் என்ற பதவியை அவர் அடையக் கூடாது என்ற டிரம்ப் தெரிவித்தார். கொடூரமான அதிபரால் கமலா ஹாரிஸ் நியமனம் செய்யப்பட்டார் என்றும் இந்த மூன்றரை ஆண்டுகளில் நாட்டுக்காக இருவரும் என்ன செய்தார்கள் என்றும் நினைத்துக் கூட பார்க்க முடியாத பல தீங்குகளை செய்துள்ளார்கள் என்றும் டிரம்ப் பேசி உள்ளார். இந்த பிரச்சாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.