Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு உதவி செய்யதான் முயற்சி பண்றோம்! – சீன விவகாரத்தில் ட்ரம்ப்!

Webdunia
ஞாயிறு, 21 ஜூன் 2020 (10:26 IST)
சீனா – இந்தியா மோதல் விவகாரத்தில் உதவி செய்ய தயாராய் இருப்பதாக அமெரிக்க அதிபட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் லடாக்கில் இந்திய – சீன ராணுவத்தினரிடையே மோதல் எழுந்ததில் இந்திய வீரர்கள் 20 பேரும், சீன வீரர்கள் 34 பேரும் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, அதை தொடர்ந்து இந்தியா – சீனா இடையேயான உறவில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே பாகிஸ்தான் விவகாரத்தில் தலையிட முயர்சித்து வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்த சீன – இந்திய விவகாரத்திலும் தலையிட்டு உதவி செய்வதாக கூறி வருகிறார். ஆனால் ஆரம்பம் தொட்டே இருநாடுகளுக்கிடையேயான பிரச்சினைகளில் அமெரிக்காவின் உதவியை இந்தியா ஏற்றுக்கொள்ளாமல் தன்னிச்சையாகவே செயல்பட்டு வருகிறது.

இதுகுறித்து பேசியுள்ள அதிபர் ட்ரம்ப் ”இந்தியாவும் சீனாவும் கடினமான சூழலில் உள்ளன. பிரச்சினைகளிலிருந்து மீண்டு வர இந்தியாவிடமும் சீனாவிடமும் நாங்கள் பேசி வருகிறோம்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 3 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கஞ்சா, போதை மாத்திரை ஆன்லைனில் விற்பனை: சென்னை பொறியியல் மாணவர்கள் கைது

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: இந்திய பங்குச்சந்தையில் தாக்கம் ஏற்படுமா?

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு.. வெள்ளை மாளிகைக்கு திடீர் பாதுகாப்பு அறிவிப்பு..!

அமெரிக்க அதிபர் தேர்தல்: டொனால்டு டிரம்ப் முன்னிலை.. கமலா ஹாரிஸ் பின்னடைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments