உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்குவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சற்றுமுன் வெளியான தகவலின்படி உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 87,57,748ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 12 லட்சம் வந்துவிட்டால் ஒரு கோடி வந்துவிடும் என்றும் இன்னும் ஓரிரு நாட்களில் ஒரு கோடியை நெருங்கிவிடும் என்றும் வல்லுனர்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 46,25,445ஆக உயர்ந்துள்ளது என்பது ஒரு ஆறுதலான விஷயம் ஆகும். ஆனால் அதே நேரத்தில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,62,519ஆக உயர்ந்துள்ளது ஒரு அதிர்ச்சிக்குரிய செய்தியாகும்,
உலக அளவில் அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 22,97,190ஆக உயர்ந்துள்ளதாகவும் அந்நாட்டில் மட்டும் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,21,407ஆக உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் கொரோனாவால் 10,38,568 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரஷ்யாவில் கொரோனாவால் 569,063 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிரேசிலில் கொரோனாவால் 10,38,568 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் கொரோனாவால் 395,812பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இங்கிலாந்தில் கொரோனாவால் 301,815 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஸ்பெயினில் கொரோனாவால் 292,655 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெருவில் கொரோனாவால் 247,925 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.