Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிரம்ப்-கிம் இரண்டாவது சந்திப்பின் தேதி அறிவிப்பு

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2019 (09:20 IST)
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறி வந்த நிலையில் இரு நாட்டிற்கும் இடையே போர் மூளம் அபாயங்கள் இருந்ததால் உலக நாடுகள் கவலை அடைந்தான

இந்த நிலையில் திடீர் திருப்பமாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூரில் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின்போது வடகொரியா அணு ஆயுதமற்ற நாடாக மாறும் என கிம் ஜாங் அன் உறுதி அளித்தார். இதனையடுத்து இருநாடுகளுக்கும் இடையே இருந்த கசப்புணர்வு நீங்கியதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக டிரம்ப், கிம் மீண்டும் சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த சந்திப்பு குறித்த அதிகாரபூர்வ தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பிப்ரவரி 27 மற்றும் 28 தேதிகளில் டிரம்ப் மற்றும் வடகொரியார் அதிபர் கிம் சந்திக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பேசிய அதிபர் டொனால்டு டிரம்ப் இதனை உறுதி செய்தார். இந்த சந்திப்பு வியட்நாமில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments