Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமலா ஹாரிஸ்.. மக்களுக்காக – அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளிப் பெண் !

கமலா ஹாரிஸ்.. மக்களுக்காக – அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளிப் பெண் !
, செவ்வாய், 29 ஜனவரி 2019 (17:15 IST)
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் அதிபர் ட்ரம்ப்பைக் கடுமையாக விமர்சிப்பவருமான கமலா ஹாரிஸ் 2020-ம் ஆண்டுக்கான அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

இந்தியாவைச் சேர்ந்த சியாமளா கோபாலன் மற்றும் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த ஆகியோருக்குப் பிறந்த கமலா ஹாரிஸ்  2020 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பாகப் போட்டியிட இருக்கிறார். அதற்கானத் தேர்தல் பிரச்சாரத்தை நேற்று முன் தினம் தனது சொந்த மாகாணமான ஓக்லாந்தில் தொடங்கியுள்ளார். கமலா ஹாரிஸ் முதல் ஆப்பிரிக்க - இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் கலிஃபோர்னியா அட்டர்னி ஜெனரலாக இப்போது பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.

ஓக்லாந்து சிட்டி ஹாலில் சுமார் 20 ஆயிரம் பேர் பேசிய கமலா ஹாரிஸ் ‘என்னுடைய தாய் சியாமளா அடிக்கடி சொல்வார். 'வெறுமனே உட்கார்ந்து எல்லாவற்றைப் பற்றியும் புகார் சொல்லிக் கொண்டிருக்காதே; எதையாவது இறங்கி செய். நான் 30 ஆண்டுகளுக்கு முன்னால் அரசு வழக்கறிஞராக எனது பணியைத் தொடங்கியபோது உறுதிமொழியாக ஐந்து வார்த்தைகளை உச்சரித்தேன்.  அந்த வார்த்தைகளே என்னுடைய வாழ்க்கையை வழிநடத்துகின்றன. அந்த உறுதிமொழி கமலா ஹாரிஸ்.. பார் பீப்புள் (கமலா ஹாரிஸ்…மக்களுக்காக).’ எனக் கூறினார்.

தற்போது அமெரிக்கர்கள் அனைவரும் மாற்றத்துக்கான புள்ளியில் இருப்பதாகவும் ஜனநாயகம் முன்னெப்போதும் இல்லாத அளவில் அச்சுறுத்தலில் இருப்பதாகவும் டிரம்ப் ஆட்சியைக் குற்றம் சாட்டினார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மிட்நைட்டில் வீடு புகுந்த கள்ளக்காதலன்: உல்லாச விருந்துக்கு பின் விபரீதம்