Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிரம்பை காப்பதற்காக பொய் சொல்லி மாட்டிக்கொண்ட ஆலோசகர்

Webdunia
சனி, 16 நவம்பர் 2019 (16:26 IST)
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை காக்கும் வகையில் அவரது ஆலோசகர் ரோஜர் ஸ்டோன் அந்நாட்டு நாடாளுமன்ற குழு விசாரணையின்போது பொய் சொன்னார் என்றும் சாட்சியங்களை அளித்தார் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
சாட்சியங்களை அழித்ததற்கு 20 ஆண்டுகள் வர சிறை தண்டனை விதிக்கப்படும். பிற குற்றங்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். இது அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்கு என்று அவர் கூறியுள்ளார்.
 
கடந்த 2016ஆம் ஆண்டு ஹிலாரி கிளிண்டன் மீதான நன்மதிப்பை சேதப்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய மின்னஞ்சல்களை விக்கிலீக்ஸ் பதிப்பிப்பதற்கு முன்னதாக, அதுகுறித்த மேலதிக தகவல்களை தெரிந்துகொள்வதற்கு தான் எடுத்த முயற்சிகள் குறித்து ரோஜர் உண்மையை மறைத்து அமெரிக்கா நாடாளுமன்ற குழு விசாரணையில் பேசினார் என்பதே முக்கிய குற்றச்சாட்டு.
 
கடந்த 2016ஆம் ஆண்டு நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு உள்ளிட்ட முறைகேடுகள் நடந்துள்ளதா என்பது குறித்த ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட முல்லர் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்த பிறகு, அதுதொடர்பான வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்படும் டிரம்பின் ஆறாவது உதவியாளர் அல்லது ஆலோசகர் ஸ்டோன் என்பது குறிப்பிடத்தக்கது.
 
என்னென்ன பொய் சொன்னார்?
டிரம்பின் பிரசார அணியுடன் தொடர்பாடல் செய்தது, 2016ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் டிரம்ப் மற்றும் விக்கிலீக்ஸுக்கு இடைத்தர் போன்று செயல்பட்டது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஸ்டோன் ஐந்து பொய்களை கூறியதாக இந்த விசாரணையின்போது நிரூபிக்கப்பட்டது.
 
அதுமட்டுமின்றி, மேற்கண்ட விவகாரங்கள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் மின்னஞ்சல்களின் இருப்பு குறித்தும் ஸ்டோன் பொய் சொன்னதாக தெரியவந்துள்ளது. டிரம்ப் மீதான நன்மதிப்பை காக்கும் வகையில் ஸ்டோன் உண்மையை திரித்து செயல்பட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments