Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முகத்தில் வால் முளைத்த நாய் குட்டி..

முகத்தில் வால் முளைத்த நாய் குட்டி..

Arun Prasath

, வியாழன், 14 நவம்பர் 2019 (20:09 IST)
முகத்தில் வால் முளைத்த நாய் குட்டி ஒன்று அமெரிக்காவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

முகத்தில் வால் முளைத்த நாய் குட்டி ஒன்று அமெரிக்காவின் மிசாரி மாகாணத்தில் கான்சாஸ் தெருவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த நாய் குட்டியை “மாக்” என்னும் தன்னார்வ கால்நடை பராமரிப்பு அமைப்பு மீட்டு பராமரித்து வருகிறது.

இந்த நாய் குட்டிக்கு நார்வால் என பெயரிட்டுள்ளனர். நார்வால் என்பது ஆர்ட்டிக் கடலில் வாழும், தலையின் முன்புறம் தந்தம் போன்ற கூர்மையான கொம்பு உடைய திமிங்கலம் என கூறப்படுகிறது. இந்த கொம்பை யூனிகார்ன் எனவும் கூறுவர்.

நார்வால் நாய்குட்டியை எக்ஸ்ரே எடுத்து சோதனை செய்ததில், முகத்தில் இருக்கு வால் உடம்பில் உள்ள உறுப்புகளோடு எவ்விதத்திலும் தொடர்புடையாக இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அந்த வாலை அசைக்க முடியாது. அந்த வால் இருப்பதால் நாய்குட்டிக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறப்படுகிறது.

இது குறித்து ”மாக்” அமைப்பை நிறுவிய ஸ்டெஃபான் கூறுகையில், ”இது போன்ற முகத்தில் வால் உள்ள நாய்க்குட்டியை நான் இதற்கு முன் பார்த்ததில்லை. இந்த நாய்க்குட்டி கான்சாஸ் தெரு ஓரத்தில் பனியில் உறைந்து கிடந்தது. அதனை மீட்டு வந்தேன்” என தெரிவித்துள்ளார்.

இந்த நாய்க்குட்டியை யூனிகார்ன் பப்பி என இணையவாசிகள் அழைத்து வருகின்றனர். பார்ப்பதற்கு மிகவும் க்யூட்டாக இருக்கும் நார்வால் நாய்க்குட்டியின் புகைப்படத்தை பலாரும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியுடன் உடன்படும் கமல்: ஏன் இந்த திடீர் ஒற்றுமை?