திருமாவளவனுக்கு நாட்டு பற்றே கிடையாது.. இந்த தேச விரோதிகளால் நாட்டுக்கு ஆபத்து! - எச்.ராஜா ஆவேசம்!

Prasanth Karthick
செவ்வாய், 29 ஏப்ரல் 2025 (11:14 IST)

பாகிஸ்தானுக்கு எதிராக போர் தொடங்குவது குறித்து ஆட்சேபம் தெரிவித்த கட்சி தலைவர்களை பாஜக பிரமுகர் எச்.ராஜா தாக்கி பேசியுள்ளார்.

 

பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழல் நிலவி வரும் நிலையில், போருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் விசிக தலைவர் திருமாவளவன், போர் அவசியமற்றது என கருத்து தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் போருக்கு எதிராக பேசியவர்களை தாக்கி பேசியுள்ள பாஜக பிரமுகர் எச்.ராஜா “பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட தயாராகி வருகிறார். நம் நாட்டிற்கு எதிராக பேசுவதையே சிலர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். கர்நாடக முதல்வர் சித்தராமையா, சீமான், திருமாவளவன் மற்றும் இந்த கம்யூனிஸ்ட் கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக, போர் நடத்தக்கூடாது என்கிறார்கள். மத்திய அரசுக்கு எதிராக பேச வேண்டுமென்றே இவர்கள் பேசுகிறார்கள்.

 

வெளிநாட்டில் இருக்கு துரோகிகளை விட உள்நாட்டு தேச விரோதிகளே அதிகம். யுத்தம்  வர வேண்டும் என நாங்கள் நினைக்கவில்லை. பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்களை கண்காணிப்பில் வைக்க வேண்டும். திருமாவளவனுக்கு நாட்டுப்பற்று கிடையாது, இவர்களை போன்றோர்களை கண்காணிப்பில் வைக்காமல் போனால் நாட்டிற்கு ஆபத்து” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments