Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தைவானில் மருத்துவரை தாக்கிய கிளியின் உரிமையாளருக்கு ரூ.74 லட்சம் அபராதம்

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2023 (21:28 IST)
தைவான் நாட்டில் ஒரு மருத்துவமனை காயப்படுத்திய கிளியின் உருமையாளருக்கு பல லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தைவான் நாட்டில் வசிப்பவர் ஹூவாங். இவர் தன் வீட்டில் கிளி ஒன்றை வளர்த்து வருகிறார். இந்தக் கிளி மற்ற கிளிகளைப் போல் இல்லாமல், 40 செ.மீ உயரம், 60 செ.மீ இறக்கைகளுடன் உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு ஹூவாங், தன் கிளியை பூங்காவிற்விற்கு அழைத்துச் சென்றிருந்தார்.  அதே பூங்காவிற்கு பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை நிபுணரும் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார்.

அப்போது, அந்தக் கிளி பறந்து சென்று, மருத்துவரின் முதுகில் அமர்ந்து, சிறகுகளை அசைத்து அவரை கீழே விழுபடி செய்தது.

இதில், மருத்துவர் படுகாயம் அடைந்து, இடுப்பு எலும்பு முறிந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அவரால் பணிக்குச் செல்ல முடியவில்லை. இந்த  நிலையில்,  வருமானம் பாதிக்கப்பட்ட மருத்துவ நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அதில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஹூவாங்கிற்கு 2 மாதம் சிறைத்தண்டனையும், ரூ.74 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக  ஹூவாங் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா உத்தவ் தாக்கரேயின் சிவசேனா?

இன்று இரவில் கனமழை பெய்யும்: 22 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

இன்று கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்..!

3 வருடங்களுக்கு முன் டிரம்ப் ஃபேஸ்புக் கணக்கை முடக்கிய மார்க்.. இன்று திடீர் சந்திப்பு..!

20 வருடங்களாக மூக்கில் இருந்த டைஸ்.. 3 வயது சிறுவனாக இருந்தபோது ஏற்பட்ட பிரச்சனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments