Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மத்திய அமைச்சரின் சகோதரர் மரணம்..2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம்

Advertiesment
bihar ashwin choubey
, சனி, 28 ஜனவரி 2023 (17:46 IST)
பீகார்  மாநிலத்தில்  நிதிஸ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடந்து வருகிறது.

இம்மா நிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சவுபேவின் சகோதரர் நியமல் சவுபே மாரடைப்பால் உயிரிழந்ததை அடுத்து,  2 அரசு மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பீகார் மாநிலம் பகல்பூரில் வசித்து வரும் நிர்மல் சவுபேவுக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டதால், அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர்,  மருத்துவர்கள் இல்லாததால் உயிரிழந்தார்.

எனவே,  மருத்துவர்கள் அலட்சியத்தால் அவர் உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்பட்டு, 2 மருத்துவர்களை பணி இடை நீக்கம் செய்து, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளி மாணவி மாரடைப்பால் உயிரிழப்பு...அதிர்ச்சி சம்பவம்