சென்னை அரும்பாக்கத்தில் சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சித்த மருத்துவரான டாக்டர் ஷர்மிகா பல்வேறு மருத்துவ தகவல்களை யூட்யூப் சேனல்கள் மூலம் வழங்கி வருகிறார்.
சமீபத்தில், அவர் பேசிய மருத்துவ தகவல்கள் அறிவியல்பூர்வமற்றதாகவும், அடிப்படை ஆதாரங்கள் அற்றதாகவும் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இவரது மருத்துவ ஆலோசனைகள் சர்ச்சைக்குள்ளான நிலையில் சமூக வலைதளங்களிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பதிவிட்ட நெட்டிசன்களும், அலோபதி டாக்டர்கள் சிலரும் டாக்டர் ஷர்மிகாவுக்கு விமர்சனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, தவறான மருத்துவ அறிவுரைகளை வழங்குவதாக எழுந்த புகாரின் பேரில் சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு இந்திய மருத்துவமுறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், இன்று சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவவையக்குனர் அலுவலகத்தில் ஆஜரான சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம், அவர் ஆதாரத்துடன் கருத்துகள் கூறினாரா என்பது குறித்து, மருத்துவ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.