Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தன்பாலின திருமணத்துக்கு அனுமதி அளித்த முதல் தென்கிழக்கு ஆசிய நாடு.. மசோதா நிறைவேற்றம்..!

Advertiesment
தன்பாலின திருமணத்துக்கு அனுமதி அளித்த முதல் தென்கிழக்கு ஆசிய நாடு.. மசோதா நிறைவேற்றம்..!

Mahendran

, புதன், 19 ஜூன் 2024 (11:30 IST)
பல மேற்கத்திய நாடுகளில் தன்பாலின திருமணத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது முதன்முதலாக ஒரு தென்கிழக்கு ஆசிய நாட்டில் தன்பாலின திருமணத்திற்கு அனுமதி அளிக்கும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
தாய்லாந்து நாட்டில் தன்பாலின திருமணத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான சட்ட மசோதா aந்நாட்டின் மேல்சபை உறுப்பினர்கள் மன்றத்தில் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன
 
இந்த மசோதா நிறைவேற சமூக ஆர்வலர்கள் அரசியல் தலைவர்கள் உள்பட பலர் இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த 120 நாட்களில் இந்த மசோதா அரசிதழில் முறைப்படி இடம்பெறும் என்றும் அதன் பின்னர் தாய்லாந்தில் தன்பாலின திருமணம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
இது குறித்த மசோதா வெளியான தகவலின் காரணமாக தன்பாலின் ஆர்வலர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். மேலும் இது வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.
 
உலகின் பிரபலமான சுற்றுலா தளங்களில் ஒன்றாக கருதப்படும் தாய்லாந்து நாட்டில் தன்பாலின திருமணத்திற்கு அனுமதி அளித்ததற்கு ஒரு சிலர் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊட்டி தொட்டபெட்டா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை.. என்ன காரணம்?