ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகள் தவறாமல் தொட்டபெட்டா சிகரத்திற்கு சென்று அங்கு உள்ள இயற்கை காட்சிகளை ரசித்து வரும் நிலையில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு தொட்டபெட்டா சிகரத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து வனத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு வனத்துறை சார்பில் ஊட்டி வடக்கு வனச்சரகம் மற்றும் தொட்டபெட்டா சிகரம் செல்லும் பகுதியில் நுழைவுச்சீட்டு வழங்கும் கட்டிடத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் அந்த பகுதியில் நிலத்தடி கேபிள் பதிக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த பராமரிப்பு பணிகள் இறுதி கட்டத்தில் இருப்பதால் தொட்டபெட்டா சிகரம் செல்லும் சாலை இன்று முதல் மூன்று நாட்களுக்கு அதாவது ஜூன் 21 வரை தற்காலிகமாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொட்டபெட்டா சிகரத்துக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகனங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருப்பதால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.