Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகிஸ்தானில் காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்...4 பேர் பலி

Advertiesment
pakistan
, சனி, 18 பிப்ரவரி 2023 (21:47 IST)
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள காவல்துறை தலைமையகத்தின் மீது நேற்று இரவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் பிரதமர் சபாஷ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு, ஏற்கனவே பொருளாதார நெருக்கடி உள்ளதால் அத்தியாவசிப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் கடுமையாகப்பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே அந்த நாட்டில் பயங்கரவாதிகள் அடிக்கடி, அப்பாவி மக்கள்  உயிரிழந்து வருகின்றனர்.

இந்த  நிலையில்,  நேற்றிரவில் அங்குள்ள கராச்சியில் உள்ள காவல்துறை தலைமையகத்தில் திட்டமிட்டு கையெறி குண்டு தாக்குதல் நடத்தியதுடன், தற்கொலைப்படை தாக்குதலும் நடத்தினர்.  

இந்த தாக்குதலின்போது, போலீஸார் அவர்கள் மீது தாக்குதல்  நடத்தினர், இதில், 5 பயங்கவரவாதிகள் கொல்லப்பட்டனர். போலீஸார் தரப்பில் 4 பேர் உயிரிழந்தனர்.

நீண்ட நேர சண்டைக்குப் பின் போலீஸார்  காவல் நிலையத்தை மீட்டனர்.  இத்தாக்குதலில் ஈடுபட்டது தலிபான் அமைப்பு என்ற தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓட்டலில் உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்...அதிகாரிகள் சோதனை