Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தீவிரவாதிகளோடு மோதி வீரமரணம் அடைந்த தமிழக வீரர்! – மக்கள் இரங்கல்!

Advertiesment
Soldier Lakshmanan
, வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (15:28 IST)
இன்று காஷ்மீரில் இந்திய ராணுவம் – பயங்கரவாதிகள் இடையே நடத்த துப்பாக்கிசூட்டில் மதுரையை சேர்ந்த ராணுவ வீரர் மரணமடைந்துள்ளார்.

காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் தர்ஹால் என்ற இடத்தில் இந்திய பாதுகாப்பு படையினர் முகாம் அமைத்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்., அப்போது அப்பகுதி வழியாக இருவர் எல்லையை தாண்டி ஊடுறுவியுள்ளனர்.

அவர்களை நிற்க சொல்லி ராணுவத்தினர் தடுத்தபோது அவர்கள் துப்பாக்கியால் ராணுவத்தினரை நோக்கி சுடத் தொடங்கியுள்ளனர். இதனால் ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த துப்பாக்கிச்சூடு சண்டையில் மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இரு ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தீவிரவாதிகளை எதிர்த்து போராடி வீரமரணம் அடைந்த மூன்று ராணுவ வீரர்களில் ஒருவர் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம் புதுப்பட்டியை சேர்ந்த லெக்‌ஷமணன் என செய்திகள் வெளியாகியுள்ளது. நாட்டிற்காக இன்னுயிர் நீத்த அவருக்கு தமிழக மக்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தை பாராட்டிய கமல் ஹாசன்