Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’எல்லையில் பதற்றம் அதிகரிப்பு ’’ - இந்தியா - பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுரை

Webdunia
புதன், 27 பிப்ரவரி 2019 (13:47 IST)
கடந்த பிப்ரவரியில் தீவிரவாதிகள் நடத்திய மனித வெடி குண்டு தாக்குல் மூலம் இந்திய ராணுவத்தினர் 40 பேர்  வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடியாக நேற்று அதிகாலை பயங்கரவாதிகள் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்ற இந்திய விமானப்படை தன் துல்லியமான தாக்குதலை நடத்தி 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை கொன்று அழித்தது.
இந்நிலையில்  இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ராணுவ தாக்குதலுக்கு பதிலாக இருநாடுகளும் அமைதியான முறையில் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்போ கேட்டுக்கொண்டுள்ளார்.
 
இதுசம்பந்தமாக இந்தியாபாகிஸ்தான் ஆகிய இரு நாடுளுக்கும் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது;
 
இந்தியாவின் பதிலடி தாக்குதலை தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாஸ்வ்சராஜுடன் தான் பேசியதாகவும், தேசத்தின் பாதுகாப்பை உணர்ந்து அமைதியான முறையில் பேச்சு வார்த்தை நடத்த வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
 
மேலும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷியுடன் தான் பேசியதாகவும் தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்போ, இருநாடுகளும் ராணுவ தாக்குதல்களை கைவிடும் படி கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments