Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டார் ஹோட்டலில் கொடூரமாக தாக்கிய காதலன்! போதைப்பொருள் கொடுத்து சீரழித்தாக காதலி புகார்

Webdunia
புதன், 27 பிப்ரவரி 2019 (13:44 IST)
போதைப் பொருள் கொடுத்து தன் வாழ்க்கையை  காதலன் சீரழித்து விட்டதாக, இளம்பெண் ஒருவர் சென்னையில் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


 
கோவையைச் சேர்ந்தவர் கௌசல்யா. இவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இவர்  மயிலாப்பூர் பகுதியில் ஐஸ்க்ரீம் கடை நடத்தி வந்த பெரோஸ்கான் என்பவருடன் பழகி வந்தார். 
 
இந்த பழக்கம் பின்னாளில் காதலா மாறியுள்ளது.
 
பெரோஸ்கான் தன் காதலி கவுசல்யாவை அடிக்கடி நட்சத்திர விடுதிகளுக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார். இருவரும் மகிழ்ச்சியாக காதலித்து வந்த நிலையில், பெரோஸ்கானின் நடவடிக்கைகள் கவுசல்யாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பிடிக்காமல் போய் உள்ளது. இதனால் கவுசல்யா ஒரு கட்டத்தில் காதலனிடம் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் தன் தோழிகளுடன் நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதிக்கு கவுசல்யா சென்றுள்ளார். அங்கு வந்த பெரோஸ்கான், கவுசல்யாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அவரை தாக்கி செல்போனையும்  உடைத்துள்ளார். 
இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்த கவுசல்யா,
தன் காதலன் தனக்கு போதைப் பொருள் கொடுத்து தன் வாழ்க்கையை சீரழித்து விட்டதாக  தெரிவித்தார்.
 
மேலும் சென்னையில் பெரோஸ்கான் தொடர்ந்து போதைப் பொருள்களை விநியோகம் செய்து வருவதாகவும் புகார் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments