காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14 ஆம் நாள் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத்தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் தேசத்திற்காய் தன் உயிரை தியாகம் செய்தனர்.
இந்நிலையில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்திற்கு உதவி செய்யும் பொருட்டு இணையம் ஒன்றைத் தொடங்கியது மத்திய அரசு. இந்த இணையத்திற்கு பணம் உதவி செய்ய முன் வந்துள்ளார். அமெரிக்கவாழ் இந்தியர் ஒருவர்(26).
தானே பேஸ்புக் பக்கத்தை துவங்கி அதன் மூலம் இதுகுறித்து விவரங்களை பதிவேற்றம் செய்துள்ளார். அதைப் பார்த்து பலர் அந்த இளைஞருக்கு உதவி செய்துள்ளனர்.
இப்போது வரைக்கும் ரூ.5 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும், சில நாட்களில் அந்த தொகை உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு வழங்கி இருப்பதாகவும் அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.
இளைஞரது இம்முயற்சிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.