Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யார் இந்த சல்மான் ருஷ்டி? 1989-லே இவர் தலைக்கு 3 மில்லியன் டாலர்கள்??

Webdunia
சனி, 13 ஆகஸ்ட் 2022 (11:45 IST)
சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்தப்பட்டது உலக அலவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


உலகின் மிக பிரபலமான எழுத்தாளராக அறியப்படுபவர் சல்மான் ருஷ்டி. இவரது கனவின் குழந்தைகள் என்ற புத்தகம் பெரும் வரவேற்பை பெற்ற அதே சமயம் பல விமர்சனங்களையும், கொலை மிரட்டல்களையும் சல்மான் ருஷ்டிக்கு பெற்று தந்தது.

சல்மான் ருஷ்டி நேற்று நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென மேடைக்கு வந்த நபர் ஒருவர் சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த சல்மான் ருஷ்டி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் படுகாயத்தில் சல்மான் ருஷ்டியின் கண் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் கண் பார்வையை இழக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் 24 வயதான ஹடி மடர் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
 

யார் இந்த சல்மான் ருஷ்டி?

இந்தியாவின் மும்பையில் பிறந்த சல்மான் ருஷ்டி சிறு வயதிலேயே இங்கிலாந்தில் குடியேறி உலகின் மிக பிரபலமான எழுத்தாளராக உருவெடுத்தார். சல்மான் ருஷ்டி 1981 ஆம் ஆண்டு எழுதிய மிட்னைட்ஸ் சில்ரன் என்ற புத்தகத்திற்காக உலகின் சிறந்த எழுத்தாளருக்கான புக்கர்ஸ் பிரைஸ் விருது வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இவர் 1988 ஆம் ஆண்டு வெளியிட்ட The Satanic Verses என்ற புத்தகம் இஸ்லாமிய மதக்கடவுளின் இறைதூதர் மற்றும் இஸ்லாமிய மதப்புத்தகத்தை விமர்சிக்கும் வகையில் இருப்பதாக இஸ்லாமிய நாடுகள் அந்த புத்தகத்திற்கு தடை விதித்தது. இந்த புத்தகத்திற்கு இந்தியாவில் இப்போதும் தடை நீடிக்கிறது.

பின்னர் 1989 ஆம் ஆண்டு சல்மான் ருஷ்டியின் தலைக்கு ஈரான் அதிபர் அதுல்லா ருஹொலா கெமியோனி 3 மில்லியன் அமெரிக்க டாலர்களை வெகுமதியாக அறிவித்தார். அதுல்லா ருஹொலா கெமியோனி உயிரிழந்த பின்னர் ஈரான் தனது அறிவிப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக பின்வாங்கியது.

தற்போது சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்தப்பட்டது உலக அலவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஆ;சொஜன் உதவியுடன் இருக்கும் அவருக்கு ஒரு கையில் நரம்புகள் துண்டிக்கப்பட்டு மற்றும் அவரது கல்லீரலில் சேதம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புயல் சின்னம்.. 3ஆம் எண் கூண்டை ஏற்ற துறைமுகங்களுக்கு அறிவுறுத்தல்..!

ஏஐ துறை ஆலோசகராக சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்: டிரம்ப் நியமனம்..

ஊழியர்களுக்கு கார், ராயல் என்பீல்ட் வாங்கி கொடுத்த தொழிலதிபர்! - சென்னையில் ஆச்சர்யம்!

எலான் மஸ்க் என் நண்பர்தான்.. அதுக்காக அவர் அதிபராக முடியாது! - ட்ரம்ப் கொடுத்த அதிர்ச்சி பதில்!

விவாகரத்து பெற்ற பணக்காரர்களுக்கு குறி.. 3 பேரை திருமணம் செய்து ரூ.1.21 கோடி மோசடி செய்த இளம்பெண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments