அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் கமலா ஹாரிஸ்க்கு எனது ஆதரவு என ரஷ்ய அதிபர் புதன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார் என்பதும் இவர் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதே போல் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் ட்ரம்ப் கடும் சவாலாக இருப்பார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் சமீபத்தில் எடுத்த கருத்துக்கணிப்பில் இருவருக்கும் இடையே சிறிய வித்தியாசம் தான் உள்ளது என்றும் ஆனாலும் கமலா ஹாரிஸ்க்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரஷ்யா அதிபர் புதின் கமலா ஹாரிஸ்க்கு தனது ஆதரவு என்று தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது . கடந்த முறை ட்ரம்ப் போட்டியிட்டபோது புதின் அவருக்கு ஆதரவு கொடுத்தார் என்பதும் புதின் ஆதரவால் தான் டிரம்ப் வெற்றி பெற்றார் என்றும் கூறப்பட்ட நிலையில் தற்போது புதின் ஆதரவு அவருக்கு கிடைக்கவில்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது