Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாலிபன்களுக்கு பாக். நேரடி உதவி? ஆதாரத்துடன் ஆப்கான் ராணுவம்!

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (12:43 IST)
தாலிபன்களுக்கு பாகிஸ்தான் நேரடியாக உதவி வருவதாக கூறி ஆதாரங்களை வெளியிட்டுள்ளது ஆப்கான் ராணுவம்.
 
ஆப்கானிஸ்தான் நாட்டை சமீபத்தில் தாலிபான்கள் ஆக்கிரமித்துள்ள நிலையில் அங்குள்ள மக்கள் வெளியேறி வருகின்றனர். ஆனால் காபூல் விமான நிலையம் தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் விமான நிலையத்தில் செல்ல முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் தாலிபன்களுக்கு பாகிஸ்தான் நேரடியாக உதவி வருவதாக கூறி ஆதாரங்களை வெளியிட்டுள்ளது ஆப்கான் ராணுவம். ஆம், ராணுவத்தினர் தாலிபன் தீவிரவாதிகளிடம் கைப்பற்றிய பாகிஸ்தான் அடையாள அட்டைகளை ஆதரமாக வெளியிட்டுள்ளது. 
 
மேலும், பாகிஸ்தான் அரசு தாலிபன்களுடன் ரகசியமாக கூட்டு வைத்து ஆப்கானிஸ்தானில் அவர்களுக்கு உதவி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது ஆப்கான் ராணுவம். முன்னதாக ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றியதற்கு பாகிஸ்தான் மகிழ்ச்சி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: முதல்வர் பதிலளிக்க அண்ணாமலை வலியுறுத்தல்..!

சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் விவசாயி கவலைக்கிடம்: மாரடைப்பு அபாயம் என தகவல்..!

ஆண் ஆசிரியருக்கு மகப்பேறு விடுமுறை அளித்த அரசு பள்ளி.. வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட்..!

அன்பு, கருணை, மகிழ்ச்சி, சமாதானம்: கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்ன தவெக தலைவர் விஜய்..!

நடுவானில் சர்க்கரை நோயாளிக்கு வந்த ஆபத்து.. உயிரை காப்பாற்றிய மருத்துவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments