Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல்- 8 பேர் பலி

Advertiesment
pakistan-afghanistan

Sinoj

, திங்கள், 18 மார்ச் 2024 (20:21 IST)
பாகிஸ்தான் நாட்டில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத குழுவினர் அதன் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு, பாகிஸ்தானுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது.
 
இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள ஆப்கானிஸ்தான்  பிற நாட்டைச் சேர்ந்த அமைப்புகளை உள்லே அனுமதிக்க மாட்டோம் என்று கூறிவருகிறது.
 
இந்த நிலையில் பாகிஸ்தானின் வஜிரிஸ்தானில் பழங்குடியினர் மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடியில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் எல்லையோர காவலில் இருந்த 7 வீரர்கள் பலியாகினர்.
 
இத்தாக்குதலுக்கு ஹபீஸ் குல் பஹதர் அமைப்பு பொறுப்பேற்றது. இவர்கள் ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து தாக்குதல்  நடத்தியதாக தெரிகிறது.
 
இதற்குப் பதிலடி கொடுப்போம் என பாகி., அதிபர் சர்தாரி கூறியிருந்த நிலையில், இன்று அதிகாலையில், ஆப்கானிஸ்தான் பகுதிக்குள் பாகிஸ்தான் வான்வெளி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 3 குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளது.
 
இதற்கு ஆப்கானிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஷிய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!