ரஷ்யாவில் அதிபருக்கான கடந்த 3 நாட்களாக நடைபெற்ற நிலையில், வாக்குகள் உடனே எண்ணப்பட்டன.
இத்தேர்தலில் தற்போதைய ரஷ்ய அதிபர் புதின் 87.8 சதவீத வாக்குகள் பெற்று மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதன் மூலம் ரஷிய அதிப ரஷிய அதிபர் புதின் அடுத்த 6 ஆண்டுகளுக்கு அந்த நாட்டின் அதிபராக நீடிப்பார் .
உலகின் முக்கிய நாடாகத் திகழும் ரஸ்யாவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள புதினுக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ரஷ்யாவில் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் அவர் அதிபராக இருந்து வரும் புதின், ரஷிய வரலாற்றின் அதிக ஆண்டுகள் அதிபராக இருந்தவர் என்ற பெருமையை பெறுகிறார். இதற்கு முன்பு ஜோசன் ஸ்டாலின் அதிக ஆண்டுகள் அதிபராக இருந்தவர் ஆவார்.
இந்த நிலையில், அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகள் தெரிவித்துள்ளா. மேலும், '' இந்தியா- ரஸ்யா இடையிலான உறவை வரும் ஆண்டுகளில் மேலும் வலுப்படுத்த விழைவதாக ''தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவை பொறுத்தவரை இதுவரை ரஷ்யாவில் நடந்த தேர்தலில் அதிக சதவீத வாக்குகளை பெற்றவர் புதின் தான் என்றும் கூறப்படுகிறது