Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என் உயிரை காப்பாற்றுங்கள்: இலங்கை அரசுக்கு நித்தியானந்தா கடிதம்!

Advertiesment
Nithiyanandha
, சனி, 3 செப்டம்பர் 2022 (14:27 IST)
எனது உயிரை காப்பாற்றுங்கள் என நித்தியானந்தா இலங்கை அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன 
 
பெங்களூரு அருகே ஆசிரமம் நடத்தி கொண்டிருந்த  நித்தியானந்தா, பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் தலைவரானார்
 
 இந்த நிலையில் கைலாசா நாட்டில் அவர் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென அவருக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது
 
இந்தநிலையில் இலங்கையில் தனக்கு தஞ்சம் கொடுக்குமாறு அந்நாட்டு அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனக்கு உடனடியாக மருத்துவ உதவி தேவைப்படுகிறது என்றும் கைலாசாவில் போதிய மருத்துவ சிகிச்சை அளிக்க முடியவில்லை என்றும் எனவே உடல் குறைபாட்டை சரிசெய்ய இலங்கை தனக்கு தஞ்சம் அளிக்க வேண்டும் என்றும் அந்நாட்டு அரசுக்கு நித்தியானந்தா கடிதம் எழுதியுள்ளார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சொத்துவரி செலுத்தாவிட்டால் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை