Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவுக்கு தயாராகும் புதிய பீர்!

Advertiesment
New beer ready for King Charles coronation
, சனி, 8 ஏப்ரல் 2023 (20:59 IST)
இங்கிலாந்து  நாட்டின் அரசியாக நீண்டகாலமாக (70 ஆண்டுகள் என இறக்கும் காலம் வரை) இருந்தவர் எலிசபெத் –II. இவர் கடந்தாண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி  காலமானார்.

இவரது மறைவையொட்டி,  இங்கிலாந்து நாட்டின் புதிய மன்னராக 3 ஆம் சார்லஸ் அரியணையின் ஏறினார். இதற்கான முடிசூட்டு விழா வரும் மே மாதம் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த விழா பிரமாண்டமாக நடைபெறும் என்று பக்கிங்காம் அரண்மனை  ஏற்கனவே அறிவித்தது.

இவ்விழாவில், அரச மரபுப்படி, சார்லஸ் கையில் செங்கோல், தடி ஆகியவவற்றை ஏந்தி அரியணையில் அமர்வார். இந்த விழாவில் , உலகில் முக்கிய தலைவர் என 2000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சார்லஸ்னின் முடிசூட்டு விழாவையொட்டி,  ஒரு மதுமான ஆலையில், ரிட்டர்ன் ஆப் தி கிங் என்று புதிய பீர் தயாரிக்கப்பட்டுள்ளது. இது. சார்லஸின் வாழ் நாள் சேவையைப் பாராட்டி, தயாரிக்கப்பட்டுள்ளளதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜகவில் இணைந்த பெண்களுக்கு விநோத தண்டனை வழங்கிய திரிணாமுல் கட்சி நிர்வாகிகள்