Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரசர் சார்லஸ் மீது முட்டையை வீசிய நபர்! – இங்கிலாந்தில் பரபரப்பு!

Advertiesment
charles
, வியாழன், 10 நவம்பர் 2022 (08:40 IST)
இங்கிலாந்து அரசரும், அரசியும் யார்க்‌ஷெரி மாகாணத்திற்கு அரசுமுறை பயணமாக சென்றபோது முட்டை வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் சமீபத்தில் மறைந்த நிலையில் அவரது மகன் சார்லஸ் தற்போது இங்கிலாந்தின் அரசாராக முடிசூட்டியுள்ளார். அவரது மனைவி கமிலா அரசி ஆகியுள்ளார்.

அதை தொடர்ந்து புதிய அரசர் சார்லஸும், அரசி கமிலாவும் இங்கிலாந்தின் பல்வேறு மாகாணங்களுக்கும் அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறாக யார்க்‌ஷெரி மாகாணத்திற்கு அவர்கள் பயணம் செய்த நிலையில் அவர்களை காண ஏராளமான மக்கள் காத்திருந்தனர்.

அப்போது கூட்டத்திலிருந்து இளைஞர் ஒருவர் திடீரென முட்டை ஒன்றை அரசர் சார்லஸ் மீது வீசினார். ஆனால் அது சார்லஸ் மீது படாமல் கீழே விழுந்து உடைந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு எழுந்தது. உடனடியாக அரசரை பாதுகாவலர்கள் பத்திரமாக அழைத்து சென்றனர். முட்டை வீசிய 23 வயதான கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Edited By Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நேபாளத்தை தொடர்ந்து அந்தமானில் நிலநடுக்கம்! – மக்கள் பீதி!