ஈரான் மதகுருவை கொலை செய்தால் தான் பிரச்சனை தீரும்: இஸ்ரேல் பிரதமர் அதிர்ச்சி பேச்சு..!

Siva
செவ்வாய், 17 ஜூன் 2025 (12:05 IST)
ஈரான் மதகுருவை கொலை செய்தால் தான் பிரச்சினை தீரும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 
நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மத்திய கிழக்கில் உள்ள அனைவரையும் பயமுறுத்தும் ஈரானால் 50 ஆண்டுகளாக மோதல்கள் அதிகரித்து வருகிறது. 
 
சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் வயல்களில் குண்டு வீசித் தாக்கி உள்ளது. ஈரான் பயங்கரவாதத்தை எல்லா இடத்திலும் பரப்புகிறது. நாங்கள் எங்கள் எதிரியை மட்டும் எதிர்த்துப் போராடவில்லை. உங்கள் அனைவரின் எதிரியையும் எதிர்த்துப் போராடுகிறோம். 
 
ஈரான் பயங்கரவாதத்தால் உலகம் முழுவதும் அழிவு நிலைக்கு தள்ளப்படுகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டியது இஸ்ரேலின் கடமை. தீய சக்திகளை எதிர்த்து நாங்கள் போராடுவோம். 
 
ஈரான் மதகுரு அயதுல்லா அலி கமேனி என்பவரை கொல்வதுதான் இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினைக்கு தீர்வு" என்றும் அவர் தெரிவித்தார். அவரது பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்தநாள்.. தமிழில் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி..!

விஜய் இல்லாமல் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த் பங்கேற்பு..!

திமுக எடுத்த சர்வே!.. விஜயின் வாக்கு வாங்கி!.. அதிர்ச்சியில் ஸ்டாலின்!....

விஜய் எங்கு போட்டியிடுவார்?.. லிஸ்ட்டில் 3 தொகுதிகள்!.. அரசியல் பரபர!...

SIR எதிரொலி!.. தமிழகத்தில் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?..

அடுத்த கட்டுரையில்
Show comments