Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அணுமின் நிலையம் மீது ஷெல் தாக்குதல் - நேட்டோ கண்டனம்!

அணுமின் நிலையம் மீது ஷெல் தாக்குதல் - நேட்டோ கண்டனம்!
, வெள்ளி, 4 மார்ச் 2022 (17:35 IST)
நேட்டோ பொதுச் செயலாளர், சப்ரோசியா அணுமின் நிலையத்தை ரஷ்யா தாக்கியதற்கு கண்டணம் தெரிவித்துள்ளார். 

 
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் உக்ரைன் ராணுவத்திற்கும், ரஷ்ய ராணுவத்திற்கும் உக்ரைன் நகரங்களில் கடுமையான மோதல் நிகழ்ந்து வருகிறது. பல பகுதிகளில் உக்ரைன் மக்களே ரஷ்ய ராணுவத்தை உள்ளே வர விடாமல் எதிர்த்து போராடி வருகின்றனர்.
 
இந்நிலையில் உக்ரைனினுள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான சப்ரோசியா அணுமின் நிலையத்தை ரஷ்யா கைப்பற்றியது. இது குறித்து நேட்டோ பொதுச் செயலாளர் யென்ஸ் ஸ்டோல்டென்பெர்க், அணு மின் நிலையம் மீதான ஷெல் தாக்குதல் உட்பட உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
அவர் கூறியதாவது, பொதுமக்கள் மீதான தாக்குதல்களுக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். இரவில் அணுமின் நிலையம் மீதான தாக்குதல்கள் குறித்தும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த போரின் பொறுப்பற்ற தன்மையையும், அதனை முடிவுக்குக் கொண்டு வருவதன் அவசியத்தையும், யுக்ரேனிலிருந்து ரஷ்யா தன் துருப்புகளை திரும்பப்பெறுவதையும், ராஜீய முயற்சிகளில் நல்நம்பிக்கை வைப்பதையும் இது உணர்த்துகிறது என தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஷ்யா கைப்பற்றிய முதல் நாளில் ஹெர்சான் நகரம் எப்படியிருக்கிறது?