Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆண்கள் பற்றாக்குறை எதிரொலி.. ஒரு மணி நேரத்திற்கு ஆண்களை வாடகைக்கு எடுக்கும் பெண்கள்..!

Advertiesment
லாட்வியா

Siva

, வெள்ளி, 5 டிசம்பர் 2025 (15:01 IST)
கிழக்கு ஐரோப்பிய நாடான லாட்வியா கடுமையான பாலின ஏற்றத்தாழ்வை எதிர்கொள்கிறது. மக்கள் தொகையின் தகவலின்படி, அங்கு ஆண்களைவிட 15.5% அதிகமான பெண்கள் உள்ளனர். இது ஐரோப்பிய ஒன்றியத்தின் சராசரியைவிட மூன்று மடங்கு அதிகம். குறிப்பாக, 65 வயதை தாண்டியவர்களில் பெண்களின் எண்ணிக்கை இரு மடங்காக உள்ளது.
 
இந்த ஆண்களின் பற்றாக்குறை, லாட்வியப் பெண்களின் அன்றாட வாழ்க்கையிலும் வேலை தளங்களிலும் எதிரொலிக்கிறது. ஆண் துணையின்றி அன்றாட வீட்டு தேவைகளையும், பழுதுபார்க்கும் பணிகளையும் சமாளிப்பதற்காக, லாட்விய பெண்கள் தற்போது பணி ஆண்களை வாடகைக்கு அமர்த்தும் சேவைகளை நாடி வருகின்றனர்.
 
Komanda24 போன்ற தளங்கள், ஆண்களை வாடகைக்கு அனுப்பும் சேவையை வழங்குகின்றன. இவர்கள் வீட்டு வேலைகளில் உதவுகின்றனர்.
 
Remontdarbi.lv என்ற மற்றொரு சேவை, பெண்கள் "ஒரு மணி நேரத்திற்கான கணவர்"என்ற சேவையை ஆன்லைன் அல்லது தொலைபேசி மூலம் பதிவு செய்ய அனுமதிக்கிறது. இந்த ஊழியர்கள் வாடகைக்கு எடுக்கும் பெண்கள் செய்ய சொல்லும் வேலைகளை செய்து முடிக்கின்றனர்.
 
ஆண்களை வாடகைக்கு எடுக்கும் இந்த போக்கு லாட்வியாவுடன் மட்டும் நின்றுவிடவில்லை. பிரிட்டனில், லாரா யங் என்பவர் 2022 ஆம் ஆண்டில், தனது கணவர் ஜேம்ஸை வீட்டு வேலைகளுக்காக வாடகைக்கு எடுத்ததாகவும், ஜேம்ஸ் ஒரு மணி நேரம் அல்லது ஒரு நாள் அடிப்படையில் தான் சொல்லும் வேலைகளுக்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறியுள்ளார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இண்டிகோ விமானம் ரத்து எதிரொலி: காணொளி காட்சி மூலம் ரிஷப்சனில் கலந்து கொண்ட மணமக்கள்..!