Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கால்பந்து மைதானத்துக்கு அடியில் 20 வெடிக்குண்டுகள்! – இத்தாலியில் பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 29 நவம்பர் 2020 (15:04 IST)
இத்தாலியில் இரண்டாம் உலக போரின் போது வீசப்பட்டு வெடிக்காத குண்டுகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப்போர் வலுப்பெற்றிருந்த 1940களில் ஐரோப்பாவின் பல பகுதிகளில் குண்டுகள் வீசப்பட்டன. முசோலினியின் அதிகாரித்திலிருந்த இத்தாலி மீது பிரிட்டன் விமான படைகள் குண்டுகளை பொழிந்தன. இவ்வாறு வீசப்பட்ட குண்டுகள் பல இன்னமும் கண்டறியப்படாமல் உள்ளன. கட்டுமானப்பணிகளின்போது அடிக்கடி சில வெடிக்குண்டுகள் கண்டறியப்பட்டும் வருகின்றன.

இந்நிலையில் இத்தாலியில் உள்ள ரோமா பகுதியில் உள்ள கால்பந்து பயிற்சி மைதானத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வெடிக்குண்டு போன்ற பொருள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அறிந்து மைதானத்திற்கு விரைந்த இத்தாலி ராணுவம் மைதானம் முழுவதும் சோதனை மேற்கொண்டு 20 வெடிக்குண்டுகளை தோண்டி எடுத்துள்ளனர். இவை யாவும் இரண்டாம் உலக போர் சமயத்தில் இத்தாலியின் மீது வீசப்பட்டவை என்று தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி.. திமுக அரசை குற்றஞ்சாட்டும் அன்புமணி..!

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments