Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

6.13 கோடியாக உயர்ந்த உலக கொரோனா பாதிப்பு!

6.13 கோடியாக உயர்ந்த உலக கொரோனா பாதிப்பு!
, வெள்ளி, 27 நவம்பர் 2020 (07:14 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 6.13 கோடியாக அதிகரித்துள்ளதால் கிட்டத்தட்ட 5 கோடியை நெருங்கிவிட்டது
 
உலகம் முழுவதும் 61,300,567 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 1,437,629 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 42,392,177 பேர்
மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 17,470,761 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன
 
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,248,676 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 269,555 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 7,846,872 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,309,871 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 135,752 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 8,717,709 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,204,570 என அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 171,497 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 5,528,599 என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மொத்தம் ரூ.400 கோடி, உடனே ரூ.50 கோடி: புயல் நிவாரண நிதி குறித்து முதல்வர் கடிதம்!