டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

Siva
புதன், 29 அக்டோபர் 2025 (15:28 IST)
"நான் முடித்து வைத்தது" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பெருமை கொண்ட இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல் மீண்டும் சூடுபிடித்துள்ளது. நேற்று காசா பகுதி மீது புதிய வான்வழி தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியுள்ளது.
 
தற்போதைய தாக்குதலை தொடங்க ஹமாஸ் தான் முதலில் தாக்குதல் நடத்தியது என்று இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த நடவடிக்கையை, "ஹமாஸை எதிர்த்த சக்திவாய்ந்த பதிலடித் தாக்குதல்" என்று வர்ணித்துள்ளார்.
 
இஸ்ரேல் தாக்குதல் காரணமாகக் காசா பகுதியில் கிட்டத்தட்ட 100 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் இப்போதும் தாக்குதலை தொடர்கிறது.
 
இந்த நிலையில் ஜப்பானில் இருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் இந்தக் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர், "எனக்குத் தெரிந்தவரையில், இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். அதற்கு பதிலடியாக இஸ்ரேல் தாக்கியுள்ளது. தங்கள் மீதான தாக்குதலை எதிர்க்க இஸ்ரேலுக்கு உரிமை உண்டு என்று நான் கருதுகிறேன்" என்று மிகவும் சாதாரணமாக பதிலளித்துள்ளார்.
 
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தற்போது நடத்திவரும் இந்த தொடர் தாக்குதல், முன்னர் செய்யப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக உள்ளது. இந்த தாக்குதல்கள் மீண்டும் ஒரு முழு அளவிலான போராக மாறுவதற்கான அபாயகரமான சூழல் நிலவுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டு கேட்க வந்த வேட்பாளரை கல்லால் எறிந்து விரட்டிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

பொறுத்திருந்து பாருங்கள்.. எல்லாமே சர்பிரைஸாக நடக்கும்: சசிகலா பேட்டி..!

17 குழந்தைகளை கடத்தி பிணை கைதிகளாக பிடித்து வைத்த நபர்.. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை..!

காலையில் குறைந்த தங்கம், மாலையில் திடீர் உயர்வு.. தற்போதைய நிலவரம்..!

டிரம்பை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை: ராகுல் காந்தி விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments