Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூசிலாந்தில் தொடர் கனமழை- வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலி

Webdunia
சனி, 28 ஜனவரி 2023 (22:08 IST)
நியூசிலாந்து நாட்டின் தொடர் கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில், பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

 நியூசிலாந்து நாட்டில் சமீபத்தில் புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் தேர்வு செய்யப்பட்ட  நிலையில் அவரது தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு  சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வரும் நிலையில்,  ஆக்லாந்து என்ற  மாநகரில் வெள்ளப் பெருக்கு அதிகரித்துள்ளது.

இதனால், ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது இந்த நகரில் அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், விமான நிலையத்திலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

இதனால் வெளி நாடு செல்லும் விமான பயணிகளும் பாதித்துள்ளனர்.  தற்போது மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

பருவகால மழையால் ஏற்பட்டுள்ள இந்த வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலியானதாகவும்  ஒருவரை தேடும் பணி நடந்து வருவதாகவும் தகவல்  வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments