Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கிரிக்கெட்டில் நான் தான் நம்பர் 1 வீரர்- பாகிஸ்தான் வீரர்

Advertiesment
Kohli century
, புதன், 25 ஜனவரி 2023 (19:48 IST)
சர்வதேச கிரிக்கெட்டில் நம்பர் 1 வீரர்  நான் தான் என்று பாகிஸ்தான் வீரர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்று வருகின்றன.

இந்த அணிகளைச் சேர்ந்த சிறந்த வீரர்கள் அவர்களின் திறமையின் அடிப்படையில், ஐசிசி அமைப்பு, மற்றும் ரசிகர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விரைவில் விராட் கோலி முறியடிப்பார் என்றும், அவர் தற்போதைய சிறந்த  கிரிக்கெட் வீரர் எனப் பலரும் கூறி வருகின்றனர்.

சமீபத்தில், ஆஸ்திரேலியா தொடரில் கோலி சதம் அடித்ததுடன், கடைசியாக விளையாடிய 7 போட்டிகளில் 3 சதங்கள் அடித்து ஐசிசி கிரிக்கெட் தரவரிசையில் 7 வது இடம் முன்னேறியுள்ளார்.

இந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பேட்ஸ்மேன் மன்சூர்,  கோலி தனக்குப் பின்னால்தான்  நான் தான் நம்பர் 1 பேட்ஸ்மேன் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், 48 இன்னிங்ஸில் 24 சதங்கள் அடித்துள்ளதாகவும், தனது சராசரி 53 % என்றும்,  குரூப் 2 கிரிக்கெட் பொறுத்தளவில் தானே நம்பர் 1 , ஒரு நாள் கிரிக்கெட்டில் 9 சாதனைகள் தன்னிடம் இருப்பதாகக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகக்கோப்பை ஹாக்கி: அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா!