இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் தோல்வி குறித்து ஹர்திக் பாண்டியா பேட்டி.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. இதில், மிட்செல் 59 ரன்களும், கான்வெ 52 ரன்கள் அடித்தனர். இந்திய தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத்தொடர்ந்து 177 என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது. இதில், வாசிங்டன் சுந்தர் 50 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 47 ரன்களும், ஹர்த்திக் பாண்டியா 21 ரன்களும் அடித்தனர். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில், சன்டர், பிராஸ்செல், லாக்கீ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். இந்நிலையில் தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா போட்டிக்கு பின்னர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
ராஞ்சியில் உள்ள JSCA சர்வதேச மைதானத்தின் ஆடுகளம் எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்திய அணி சில கூடுதல் ரன்களை விட்டுக் கொடுத்தது, இது பேட்டர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. விக்கெட் இப்படி விளையாடும் என்று யாரும் நினைக்கவில்லை, இரு அணியினரும் ஆச்சரியப்பட்டனர். ஆனால் அவர்கள் இதில் சிறப்பாக விளையாடினர். அதனால் தான் முடிவு அப்படி முடிந்தது.
உண்மையில் புதிய பந்து பழையதை விடவும் அதன் வழியிலும் அதிகமாக மாறியது, சுழன்றது. நானும் சூர்யாவும் பேட்டிங் செய்யும் வரை ஆட்டத்தில் இருந்தோம், நாங்கள் சமமானதை விட 25 ரன்களை அதிகமாக கொடுத்து முடித்தோம் என்று ஹர்திக் போட்டிக்கு பிந்தைய விளக்க விழாவில் கூறினார்.
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து தொடரை 1-0 என கைப்பற்றியது, மேலும் ஞாயிற்றுக்கிழமை லக்னோவில் நடைபெறும் இரண்டாவது டி20 போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது.