பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளம்: 1033 பேர் பலி!
பாகிஸ்தானில் வரலாறு காணாத பெய்த கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் இதுவரை 1033 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் ஏராளமான பேரை காணவில்லை என்றும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
பாகிஸ்தானில் உள்ள முக்கிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த வெள்ளம் ஊருக்குள் புகுந்து பல வீடுகளை அடித்து சென்று விட்டது என்பதும் இதுவரை 10033 பேர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
மேலும் நூற்றுக்கணக்கான மக்களை காணவில்லை என்றும் அவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது
மூன்று கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுமார் 10 லட்சம் வீடுகள் இடிந்து தரைமட்டமாகி உள்ளதாகவும் 149 மேம்பாலங்கள் 170 வணிக வளாகங்கள் இடிந்த நிலையில் இருப்பதாகவும் சுமார் 3500 கிலோமீட்டர் சாலைகள் சேதமடைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன