Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லிப்டில் கயிற்றில் சிக்கிய சிறுவன்: காப்பாற்றிய சிறுமி- வைரல் வீடியோ

Webdunia
திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (18:13 IST)
துருக்கியில் லிப்டில் கயிற்றில் சிக்கிய சிறுவனை சமயோஜிதமாக செயல்பட்டு சிறுமி காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

துருக்கியில் உள்ள இஸ்தான்புலில் இரண்டு சிறுமியர்களும் ஒரு சிறுவனும் லிப்ட் ஒன்றினுள் நுழைகின்றனர். அந்த சிறுவன் ஒரு கயிற்றை இழுத்து வருகிறான். ஆனால் அதை யாரும் கவனிக்கவில்லை. லிஃப்டின் கதவுகள் மூடும்போது கயிறு கதவில் சிக்கிக் கொள்கிறது. லிஃப்ட் கீழே இறங்க தொடங்கவும் கயிறு சிறுவன் கழுத்தில் மாட்டி அவனை மேலே சடாரென தூக்கியது. உடனே சமயோஜிதமாக செயல்பட்ட சிறுமி அந்த சிறுவனை தூக்கி பிடித்து கழுத்து இறுகாதவாறு பார்த்துக் கொண்டார்.

அப்படியே லிஃப்டில் உள்ள அலாரம் பட்டனை அழுத்தி உடனே லிப்டை நிறுத்தினார். பிறகு கழுத்தை இறுக்கிய கயிறை விடுவித்து சிறுவனை மீட்டார். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது. இதை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள பலர் சிறுமியின் புத்திசாலித்தனத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 பெண்களை காதலித்து இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

17 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோல்.. டாக்டரின் கவனக்குறைவால் சோகம்..!

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரில் உள்ள திட்டமும் பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்! தீவிர மீட்புப்பணிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments