Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீட்டை வாடகைக்கு விடும் பிரதமர் – கடுப்பான நெட்டிசன்ஸ்

Advertiesment
வீட்டை வாடகைக்கு விடும் பிரதமர் – கடுப்பான நெட்டிசன்ஸ்
, திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (15:19 IST)
இந்தியாவில் காஷ்மீர் விவாதம் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் வீட்டை வாடகைக்கு விட்டு நெட்டிசன்களிடம் திட்டு வாங்கி கொண்டிருக்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றபோது “எளிமையான பிரதமராக வாழ்வேன். என்னோடு இரண்டு கார்கள் வந்தால் போதும்” என பல பில்டப்புகளை கொடுத்தார் இம்ரான் கான். ஆனால் இப்போது தனது ஆடம்பரமான பிரதமர் மாளிகையை ஒரு திருமணத்திற்கு அவர் வாடகைக்கு விட்டதாக பலர் சமூக வலைதளங்களில் செய்திகளை பரப்பி வருகிறார்கள்.

கடந்த சனிக்கிழமை ராணுவ செயலர் வசீம் இப்திகர் என்பவரது மகளின் திருமணம் பிரதமர் மாளிகையில் கோலகலமாக நடைபெற்றதாகவும், அதில் பிரதமர் இம்ரான் கானும் கலந்து கொண்டதாகவும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும் அந்த திருமண அழைப்பிதழின் புகைப்படத்தை பதிவிட்டு அதில் திருமணம் நடைபெறும் இடம் “பிரதமர் மாளிகை” என குறிப்பிடப்பட்டுள்ளதையும் கோடிட்டு காட்டியுள்ளனர்.

இந்த குற்றசாட்டு குறித்து பிரதமர் இம்ரான்கான் சார்பில் எந்த விளக்கமும் இதுவரை அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”ஒரு கையில் சரக்கு, இன்னொரு கையில் கத்தி”.. பொது வெளியில் சாவகாசமாக நடந்து சென்ற ரவுடிகள்