Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கால்வாயை பறந்தே கடந்து பிரெஞ்சு வீரர் சாதனை

கால்வாயை பறந்தே கடந்து பிரெஞ்சு வீரர் சாதனை
, திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (12:50 IST)
தெற்கு இங்கிலாந்தையும், வடக்கு பிரான்ஸையும் பிரிக்கும் இங்கிலிஷ் கால்வாயை பறந்தபடியே கடந்து சாதனை படைத்துள்ளார் ஒரு பிரெஞ்சு வீரர்.

அட்லாண்டிக் பெருங்கடலில் தெற்கு இங்கிலாந்தையும், வடக்கு பிரான்ஸையும் பிரிக்கும் இங்கிலிஷ் கால்வாயை நீந்தி சாதனை படைக்க வேண்டும் என்று பலர் விரும்புவர்.

இந்நிலையில் 40 வயதான பிரெஞ்சு வீரர் பிராங்கி ஜபதா என்பவர், ’ஹோவர் போர்டு’ மூலம் இங்கிலிஷ் கால்வாயை கடந்துள்ளார்.

ஹோவர் போர்டு என்றால் என்ன? ஹோவர் போர்டு என்பது தனிப்பட்ட பயணத்துக்காக உருவாக்கிக்கொள்கிற ஒரு வாகனம். இதனை பறக்கும் பலகை என்றும் சொல்லலாம். இந்த ஹோவர் போர்டை பல ஆண்டுகள் முயற்சி செய்து ஜபதா உருவாக்கியுள்ளார்.

நேற்று அதிகாலை ஜபதா, பிரான்சில் உள்ள சங்கத்தேவில் இருந்து தனது ஹோவர் போர்டில் புறப்பட்டார். இவரை மூன்று ஹெலிகாப்டர்கள் கண்காணித்து வந்தன. கிட்டதட்ட 35 கி.மீ. தொலைவை 20 நிமிடங்களில் மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் தண்ணீருக்கு மேல் 15-20 மீட்டர் உயரத்தில், இங்கிலிஷ் கால்வாயை கடந்து செயிண்ட் மார்கரெட்ஸ் விரிகுடாவில் தரை இறங்கினார்.
webdunia

அவர் தரையிறங்குவதை காண்பதற்கு கூடி இருந்த பொதுமக்களும் பத்திரிக்கையாளரும் அவரை கை கட்டி வரவேற்றனர். இது குறித்து ஜபதா அளித்த பேட்டியில், ”ஒரு சிறப்பான இடத்தில் நான் தரையிறங்கியுள்ளேன். எனது குடும்பத்துக்கு நன்றி. என் மனைவிக்கு மிகப்பெரிய நன்றி. அவர் எப்போதும் எனக்கு இது போன்ற வினோதமான திட்டங்களுக்கு ஆதரவாக இருந்து வருகிறார்” என்று கூறினார்.

மேலும் வலியைப்பற்றி சிந்திக்காமல் மகிழ்ச்சியைப் பற்றி, சிந்தித்தது தான் இந்த முயற்சியில் ஈடுபட காரணம் எனவும் ஜபதா கூறியுள்ளார்.

1994 ஆம் ஆண்டு, தமிழக வீரர் குற்றாலீஸ்வரன் 1994 ஆம் ஆண்டு, தனது 13 வயதில் இங்கிலிஷ் கால்வாயை நீந்தி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரண்டாக பிரியும் ஜம்மு - காஷ்மீர்: எதிர்ப்புகளுக்கு மத்தியில் அமித் ஷா அறிவிப்பு!