Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேட்டி எடுத்தவரின் செல்போனை திடீரென பிடுங்கிய பிரதமர்: வைரலாகும் வீடியோ

Webdunia
புதன், 11 டிசம்பர் 2019 (22:57 IST)
இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தன்னைப் பேட்டி எடுத்த நிருபரின் செல்போனை திடீரென பிடுங்கியது பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. இது குறித்த வீடியோ நாடு முழுவதும் வைரல் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர பிரச்சாரம் செய்து வந்தார். அப்போது நிருபர் ஒருவர் தன்னுடைய மொபைல் போனில் உள்ள புகைப்படம் ஒன்றைக் காட்டி அது குறித்து கேள்வி எழுப்பினார் 
 
இந்த கேள்வியால் ஆத்திரமடைந்த பிரதமர் ஜான்சன் திடீரென எதிர்பாராத வகையில் அந்த செல்போனை பிடுங்கி தனது சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டார். இது குறித்த வீடியோவை அந்த நிருபர் தனது டுவிட்டர் இணையதளத்தில் பதிவு செய்து வைரல் ஆக்கினார் 
 
நாளை ஓட்டுப்பதிவு நடக்க உள்ள நிலையில் போரீஸ் ஜான்சன் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில் இந்த வீடியோ வைரலானது அவருக்கு பெரும் பின்னடைவே என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ திட்டத்தை டெல்லி நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: ராமதாஸ்

நவீன் பட்நாயக் வலது கையாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் மனைவி ராஜினாமா..!

வக்பு வாரிய மசோதா விவாதத்தில் கலந்து கொள்ளாத ராகுல் காந்தி: குவியும் கண்டனங்கள்..!

செலவு கோடி ரூவாப்பே.. ஆனால் கோவில் நிலையோ பரிதாபம்! - காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை!

வருஷம் 3 கோடி சம்பளம்.. வீடு, கார் சகல வசதிகளும்..! ஆனா யாரும் வரமாட்றாங்க! - ஆஸ்திரேலியாவில் ஒரு விநோத பகுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments