Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திடீரென தமிழில் டுவீட் போட்ட பிரதமர் மோடி! என்ன காரணம் தெரியுமா?

திடீரென தமிழில் டுவீட் போட்ட பிரதமர் மோடி! என்ன காரணம் தெரியுமா?
, புதன், 11 டிசம்பர் 2019 (09:07 IST)
பிரதமர் நரேந்திர மோடி அவ்வப்போது மேடையில் தமிழில் பேசுவதும், தமிழில் டுவீட் பதிவு செய்வதும் அவ்வப்போது நடந்து வரும் நிகழ்வாக இருந்து வரும் நிலையில் சற்று முன்னர் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இரண்டு டுவிட்டுக்களை தமிழில் பதிவு செய்துள்ளார்
 
இன்று மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு பாரதியார் குறித்து அவர் பதிவு செய்துள்ள இந்த இரண்டு டுவிட்டுக்களுக்கும் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. ஒரு சில நிமிடங்களில் இந்த இரண்டு டுவிட்டுக்களுக்கும் ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் மற்றும் ரீடுவீட்டுக்கள் கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
webdunia
பாரதியார் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது: மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் மாமனிதர் சுப்பிரமணிய பாரதியின்  பிறந்தநாளன்று அவரை நினைவு கூர்கிறேன். தேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர்.  அவரது எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் விதமாகவே உள்ளன. சுப்பிரமணிய பாரதி, நீதி சமத்துவம் ஆகியவற்றை மற்ற எவற்றிற்கும் மேலாக நம்பினார். 'தனியொருவனுக்கு உணவில்லை எனில்  ஜகத்தினை அழித்திடுவோம்' என்று ஒருமுறை சொன்னார். மனிதனின் அவதியை போக்கி அதிகாரமளிக்க அவர் கொண்டிருந்த பார்வையை இது ஒன்றே விளக்குகிறது’ என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
 
பாரதியாரின் பிறந்த நாளை தமிழக அரசியல்வாதிகளே பலர் மறந்துவிட்ட நிலையில் பிரதமர் மோடி அவரது பெருமைகளை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளது குறித்து பாஜகவினர் பாராட்டி புகழ்ந்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கட்டாயமாக ஓரினச்சேர்க்கை… மறுத்த சிறுவனைக் கொலை செய்த கும்பல் – திருச்சியில் நடந்த கொடூரம் !