டுவிட்டர், மற்றும் பேஸ்புக் உள்பட பிரபல நிறுவனங்களில் இருந்து வேலை இழந்து இருந்தால் எங்கள் நிறுவனத்திற்கு தாராளமாக வரலாம் என பிரபல நிறுவனம் ஒன்று அழைப்பு விடுத்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள முக்கிய நிறுவனங்களில் வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பாக டுவிட்டர் பேஸ்புக் அமேசான் கூகுள் மைக்ரோசாப்ட் உள்பட பல நிறுத்தங்களில் கடந்த சில மாதங்களாக வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் dream11 நிறுவனத்தின் சி.இ.ஓ ஹர்ஷ் ஜெயின் என்பவர் ட்விட்டர் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு தருவதாக அறிவித்துள்ளார்.
எங்கள் நிறுவனத்தின் இமெயிலான [email protected] தொடர்பு கொண்டு வேலை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது