Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐடி கம்பெனிகளில் 50,000 ஊழியர்கள் வரை பணி நீக்கம்!

Advertiesment
Computerized fest
, வியாழன், 10 நவம்பர் 2022 (19:51 IST)
உலகின் முன்னணி நிறுவங்களின் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில்,  ஐடி நிறுவனங்களிலும் இது  தொடர்வது ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகப் பணக்கார்களில் முதலிடத்திலுள்ள எலான் மஸ்க், சமீபத்தில், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதோடு, அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ., நிதி அதிகாரி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பணியாளர்களை பணி நீக்கம் செய்வதாக தகவல் வெளியானது. இது, உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், நேற்று சமூகவலைதளங்களில் நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டாவில்  இருந்து 11,000 பணியாளார்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆட்குறைப்பு நடவடிக்கைகளின் முன்னணி தொழில் நுட்ப   நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன.

அதன்படி,  முன்னணி  ஐடி நிறுவனங்களில் கடந்த சில வாரங்களில் சுமார் 50,000  ஊழியர்கள் வரை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

Edited by Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையின் முக்கிய பகுதிகளில் கனமழை: வாகன ஓட்டிகள் அவதி!