Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுரங்கப்பாதையில் பயணம் செய்யும்போது யாருடனும் பேச வேண்டாம்: பிரான்ஸ் அரசு எச்சரிக்கை

Webdunia
ஞாயிறு, 24 ஜனவரி 2021 (15:20 IST)
சுரங்கப்பாதையில் பயணம் செய்யும்போது யாருடனும் பேச வேண்டாம்:
கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டில் தற்போது இரண்டாவது அலை உருவாகி உள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து அந்நாட்டு அரசு ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது 
 
ஏற்கனவே இரண்டாவது முறையாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது பொதுமக்களுக்கு சில அறிவுரைகளைக் கூறியுள்ளது. அவற்றில் ஒன்று சுரங்கப்பாதைகள் பயணம் செய்யும் போது யாரும் ஒருவருடன் ஒருவர் பேச வேண்டாம் என்றும் அதே போல் சுரங்க பாதையில் பயணம் செல்லும் போது செல்போனில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளது 
 
மேலும் பொது போக்குவரத்தின் போது கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என்றும் துணிகளால் ஆன மாஸ்குகளை மக்களை மட்டுமே அணிய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் தனிமனித இடைவெளியை இன்னும் சில மாதங்களுக்கு கடைபிடிக்க வேண்டும் என்றும் இதனை கடைபிடித்தாலே பிரான்ஸ் நாடுகளில் இருந்து மீண்டு விடும் என்றும் அந்நாட்டு அரசு மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments