Publish Date: Sun, 24 Jan 2021 (10:40 IST)
Updated Date: Sun, 24 Jan 2021 (10:41 IST)
கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிக்கலா எழுந்து நடப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா எதிர்வரும் 27ம் தேதி விடுதலையாக இருந்த நிலையில் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை சோதித்ததில் அவருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அவர் உடல்நலம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அவ்வபோது அறிக்கை வெளியிட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சசிக்கலா ரத்தத்தில் 97% ஆக்ஸிசன் இருப்பதாகவும், உடல்நலமாக இருப்பதாகவும் எழுந்து நடப்பதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.